இவனை என்ன செய்யலாம்?




இரவு ஒன்பது மணி.  நான் தொடரும் பதிவுகளைப் படித்து பின்னூட்டங்களை பதிப்பித்துக் கொண்டிருந்தேன்.  என் அலைபேசி ஒலித்தது.  குமார் ஈயென்று சிரித்துக்கொண்டிருந்தான்.  அவன் என்னுடன் ஆலப்புழைக்கு வந்தவன்.  இந்த நேரத்தில் எதற்காக அழைக்கிறான் என்ற கேள்வி மனதில் ஓட போனை எடுத்து ஹலோ என்றேன்.


"ஹலோ, நான் தான் பேசறேன்"


"ம்.. சொல்லு, என்ன இந்த நேரத்தில"


"ஒண்ணுமில்ல, நாம ஆலப்புழா போனோமில்லையா, அந்த போட்டோவெல்லாம் வச்சிருக்கியா"


"ம், இருக்கே"


"அதை நாளைக்கு வரும்போது பென் டிரைவில காப்பி பண்ணி கொண்டு வர்றியா"


"கண்டிப்பா.."


"எதுக்குன்னு கேக்கலை"


"எதுக்குன்னு எதுக்கு கேக்கணும், இதெல்லாம் பொக்கிஷம். நாம போய்ட்டு வந்த நினைவுகளை அப்பப்ப ரீகலெக்ட் பண்ணிக்கலாம்.  ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது நமக்கு ஏற்படற ஆனந்தமே அலாதி தான்"


"அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் வந்திருக்கார்.  அவர் குடும்பத்தோட ஆலப்புழா போகணும்னு சொன்னார். அதனாலதான் கேட்டேன்"


"ஓ, அப்படியா.. ஒண்ணு பண்ணு, எல்லா போட்டோவும் கூகுள் டிரைவ்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். என்னோட ஐடி தர்றேன், நீ இப்பவே பார்த்துக்கோ"


"கூகுள் டிரைவா? அப்படின்னா?"


"அது கூகுள் நமக்கு கொடுக்கிற ஒரு facility . அதில நம்முடைய முக்கியமான டாகுமென்டுகளை சேவ் பண்ணி வச்சிக்கலாம்."


"அதெல்லாம் எனக்கு ஓப்பன் பண்ணத் தெரியாதே"


"அது ரொம்ப ஈசி தான், நீ கொஞ்சம் டிரை பண்ணிப் பாரு"


"வேண்டாம், எனக்கு எல்லா போட்டோவும் தேவையில்ல. வந்திருக்கிறவருக்கு போட் ஹவுஸ் எப்படி இருக்கும்னு காட்டணும், அது போதும்"


"இவ்வளவுதானா, அப்போ என் வெப்சைட்டிலயே பாத்துக்கலாமே, நான் தான் நிறைய போட்டோ அப்லோட் பண்ணி வச்சிருக்கேனே"


"ஓ, உனக்கு வெப்சைட்டெல்லாம் இருக்கா, அட்ரஸ் சொல்லு"


"ஸ்கூல்பையன் 2012 டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் இன்"


"என்ன ஸ்பாட்?"


"ப்ளாக்"


"என்னது? க்ளாக்கா?"


"இல்ல, ப்ளாக். பி எல் ஓ ஜி"


"ப்ளாக்னா?"


"அதுவும் கூகுள் தர்ற ஒரு வசதி தான்.  அதை யூஸ் பண்ணித்தான் ஸ்கூல் பையன் கிற வெப்சைட் ஓப்பன் பண்ணிருக்கேன்"


"ஸ்கூல் பையன் யாரு"


"என் பையன்"


"அவன் ஸ்கூல் பையன்னு தான் எனக்குத் தெரியுமே, அத எதுக்கு வெப்சைட்டுக்கு பேரா வச்சிருக்க?"


"அட ஞானசூனியமே, உனக்கு போட்டோதானே வேணும், நான் சொன்ன அட்ரசில போய்ப்பாரு. இருக்கும்"


"நீ ரொம்ப கஷ்டமான அட்ரசா சொல்ற, வேற எதாவது வழி இருக்கா?"


"ஒண்ணு பண்ணு, கூகுள்ல போய் ஸ்கூல் பையன்னு தமிழ்ல டைப் பண்ணி சர்ச் கொடு, வந்திரும்"


"எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாதே"


"தமிழ் டைப்பிங் தெரியணும்னு அவசியம் இல்ல. யுனிகோட்ல டைப் பண்ணலாம்"


"யுனிகோட்னா?"


"தமிழை இங்கிலீஷ்ல டைப் பண்ணா போதும், அதுவே மாறிக்கும்.  இப்போ அம்மானு டைப் பண்ணனும்னா ஏ எம் எம் ஏ ஏ னு டைப் அடிச்சா போதும், அதுவே தமிழ்ல அம்மானு வந்திரும்"


"கூகுள்ல அதுவே மாறுமா?"


"மாறாது, உன் கம்ப்யூட்டர்ல செட்டிங் மாத்தணும். அதெல்லாம் இப்போ பண்ண வேண்டாம், தமிழ் எடிட்டர் டாட் ஓஆர்ஜினு ஒரு சைட் இருக்கு.  அதில போய் ஸ்கூல் பையன்னு நான் சொன்ன மாதிரி டைப் பண்ணு, அதை காப்பி பண்ணி கூகுள்ல போய் பேஸ்ட் பண்ணு, ரிசல்ட்ல வரும், பாத்துக்கோ"


"என்னப்பா, ரெண்டு மூணு போட்டோ கேட்டா நீ இத்தனை வெப்சைட் சொல்ற"


"சரி, உன் மெயில் ஐடி கொடு.  நாலஞ்சு போட்டோ இப்பவே அனுப்பறேன், சிம்பிளா முடிஞ்சிரும்"


"எனக்கு மெயில் ஐடியே கிடையாதே, ஆபிஸ் மெயில் மட்டும்தான் இருக்கு"

"  "


"அதுக்குத்தான் சொன்னேன், பென் டிரைவில காப்பி பண்ணி நாளைக்கு ஆபிசுக்கு வரும்போது எடுத்துட்டு வான்னு"

"  "

"பாரு இவ்வளவு நேரம் பேசி எனக்கு இருபது ரூபாய் போச்சு"

"  "

"நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வந்திரு"

"சரி"


போனை வைத்துவிட்டேன்.  எனக்கு கோபம் அடங்க அரை மணி நேரம் ஆச்சு.


நீங்களே சொல்லுங்க. இவனையெல்லாம் என்ன செய்யலாம்?


டிஸ்கி: 


இப்படி ஒரு பதிவு எழுதப் போவதாக சம்பந்தப்பட்ட குமாரிடம் நான் ஏற்கனவே விவாதித்துவிட்டேன்.  அவர் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்று தெரிவித்துவிட்டார்.  அதனால் நண்பர்கள் பின்னூட்டத்தில் என்னைத் திட்டவேண்டாம்.  உக்கும், அவருக்கு தெரியாம போட்டிருந்தா மட்டும் அவர் வந்து படிச்சிட்டு திட்டவா போறார்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது.  வரட்டா...