ஸ்கூல் பையன் எனும் நான்
Thursday, December 11, 2014
Posted by கார்த்திக் சரவணன்
ஸ்கூல் பையன்
என்ன நினைத்து இந்தப் பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. வலைப்பதிவு
தொடங்கியபோது என் மகன் படத்தை முன்வைத்து ஸ்கூல் பையன் என்று பெயரிட்டேன். மற்ற
வலைத்தளங்களைப் படித்து அதே பெயரில் கருத்துக்களை சொல்ல, அந்தப் பெயரே
நிலைத்துவிட்டது.
முகநூல் பக்கம் வந்தபோது வலைப்பதிவர்களுக்குத் தெரியும் விதமாக ஸ்கூல்
பையன் என்கிற பெயரிலேயே நட்பு அழைப்புக்கள் விடுக்கத் தொடங்கினேன். நம்
வலைப்பதிவர்களும் என்னை அடையாளம் கண்டு நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
நிற்க.... வலைப்பதிவுகளைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான பெயர்கள்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் முகநூலிலோ இதை fake id என்கின்றனர். இருக்கட்டும்.
ஆனால் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்துக்கொண்டு சிலருடைய பதிவுகளைப்
படித்துவருகிறேன். அவர்களில் சிலர் என்னை நட்பு வட்டத்திலிருந்து
நீக்கியிருக்கிறார்கள். தெரியாதவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஆனால் பல
வருடங்களாக நான் தொடர்ந்து வரும் சதீஷ்குமார் ஜோதிடர் மற்றும் அகநாழிகை பொன் வாசுதேவன்
கூட இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது தான் கொஞ்சம் வருத்தப்படச்
செய்கிறது.
Unfriend செய்வது ஒருபுறம் இருக்க, நான் விடுக்கும் சிலபல நட்பு
அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் திரு.பெ.கருணாகரன்
அவர்கள். பேக் ஐடி என்று நினைத்து நட்பு அழைப்பை ஏற்றுக்கொள்ளாமலே விட்டிருந்தார்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் இயங்குவதால் பல முறை கேலி கிண்டலுக்கு
ஆளானதுண்டு. பொதுவாக அதையெல்லாம் கண்டுகொள்ளாத எனக்கு நெருக்கமான நண்பர்களே
கிண்டல் செய்யும்போது கொஞ்சமே கொஞ்சம் உறுத்துகிறது. பிடித்த பத்து புத்தகங்களைப்
பற்றிய தொடர்பதிவு வந்தபோது கூட நெருங்கிய நண்பர் என்னை tag செய்து கிண்டல்
செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வந்திருந்த பின்னூட்டங்களிலும் நண்பர்கள் கிண்டல்
செய்திருந்தனர். பரவாயில்லை. ஸ்க்ரீன்ஷாட் காண்பித்து அவர்களது மனதைப் புண்படுத்த
விரும்பவில்லை.
சில நாட்களுக்கு முன் என் மனைவிக்கு ஒரு முகநூல் கணக்கு தொடங்கிக்
கொடுத்தேன். அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்யும்போது “Married to” என்ற
பகுதியில் ஸ்கூல் பையன்னா எழுதறது என்று அவள் கேட்டபோது கொஞ்சம் ஜெர்க் ஆனேன். J
சீரியசான சில இடங்களில் பின்னூட்டம் இடுவதில் சிக்கல்கள் இருக்கின்றன.
பல இடங்களில் இறங்கி விளையாட முடியவில்லை. ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே
பார்க்கமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ் அமுதன் அவர்களது பதிவுக்கு
பின்னூட்டம் எழுதியதில் பின்னால் வந்த பெண்மணி ஒருவர் “முட்டாப்பயலே, ஒழுங்கா
படிச்சிட்டு வா” என்று எனக்கு பதில் கொடுத்திருந்தார்.
சொந்தப்பெயர் இருக்க எதற்கு புனைபெயரில்(!!) எழுதவேண்டும்? இதுபற்றிய
ஒரு தனிப்பட்ட விவாதத்தில் நண்பர்கள் சிலர் ஸ்கூல் பையன் என்ற பெயர்
நிலைத்துவிட்டது, இனி மாற்றவேண்டியதில்லை என்கின்றனர். ஆனால் பின்னாளில் நான்
நடிக்கப்போகும், உதவி இயக்குனராக வேலை செய்யப்போகும் சில குறும்படங்களில் என்ன
பெயர் வைப்பது? இவ்வளவு ஏன், நானே ஒரு புத்தகம் எழுதினால் என்ன பெயரில் எழுதுவது?
இவ்வாறாக சில கேள்விகள் மனதைக் குடைய சொந்தப் பெயரிலேயே எழுதுவது
என்று தீர்மானித்துவிட்டேன். இது சொந்தப் பெயரிலேயே எழுதலாமா வேண்டாமா என்ற
விவாதத்துக்காக இல்லை. ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டும்.
Profile-இல் பெயர் மாற்றுவதற்காக ஒரு பதிவா என்று கேட்காதீர்கள்.
சத்தமில்லாமல் பெயர் மாற்றிய பதிவர்களால் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதே நிலை
என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம்.
ஆக, சரவணகார்த்திகேயன் என்ற சொந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றி
எழுத்துலகுக்காக “கார்த்திக் சரவணன்” என்று மாற்றிக்கொள்கிறேன். நாளை முதல் பெயர்
மாற்றம் செய்கிறேன். மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். அல்லது மூன்று முறை சொல்லுங்கள்:
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்,
பதிவர்கள்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
மன வருத்தம் புரிகிறது... நீங்கள் என்னதான் மாற்றினாலும் "ஸ்கூல் பையன்" என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்... உங்கள் எண்ணம் நிறைவேற நாளாகும்... முக நூலுக்காக Blogger Profile-ல் மாற்றி விடாதீர்கள்...
ReplyDeleteஓக்கே ! ஸ்கூல் பையன் என்ற கார்த்திக் சரவணன்!
ReplyDeleteபெயரில் என்ன இருக்கிறது? அது ஒரு அடையாளம் மட்டுமே. மதுரையில் என் கூட "சமுத்திரம்" என்று ஒருவர் வேலை பார்த்தார்.
ReplyDeleteஸ்கூல் பையன் நான் மிகவும் ரசித்த பெயர்! என்னால் இப்படி வித்தியாசமாக சூட்ட முடியவில்லையே என்று நினைத்தேன்! கார்த்திக் சரவணன் என்று எழுதினாலும் தளத்தின் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் சிறிய ஆலோசனை! அப்படி மாற்றினாலும் அடைப்புக் குறிக்குள் சிறிது காலம் ஸ்கூல்பையன் தொடர்ந்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும். நன்றி!
ReplyDeleteபிடித்தமான புனைப்பெயரை வைத்துக் கொண்டால் இப்படியெல்லாம் சிரமம் இருக்கா!!.
ReplyDeleteசரி, சுரேஷ் சொல்கிற மாதிரி, தளத்தின் பெயரை மட்டும் மாற்றி விடாதீர்கள்.
பெயரை மாற்றத் தேவையில்லை--பெயரில் ஒன்றும் இல்லை.
ReplyDeleteசுஜாதா என்ற பெயரிலேயே பெரிய எழுத்தாளர் ஆகவில்லையா?
தாரளாம மாற்றிக்கொள்ளுங்கள்--நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே!
மற்றவர்கள் நிர்பந்தித்தால்---Say No! A big NO; learn to say "No."
நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதுபடியே செயல்படுங்கள் அதுவே உங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கொல்லி மலை சித்தர் சொல்லிருக்கார் அண்ணேன்...அதுபடியே நடங்க ...வாழ்த்துக்கள்
ReplyDeleteதவறில்லை! மாற்றுங்கள்! ஆனால் அடைப்புக்குள் தற்போதைய பெயரை ( பழகும் வரை ) போடுங்கள்!
ReplyDeleteஎன்னப்பா இது! இப்படியும் கூட சோதனைகளா!! பெயரில் என்ன இருக்கின்றது? புரியவில்லை! ம்ம்ம் பரவாயில்லை....நாங்கள் உங்கள் பெயர் மனதில் ஏறிவிட்டது ஏற்கனவே தெரிந்தது என்பதால்....ப்ளாகருக்கும் இது தேவையா ?!?
ReplyDeleteசுஜாதா ரங்கராஜன் மாதிரி நீங்களும் கார்த்திக் ஸ்கூல் பையன் என்று பெயரை வைதுக்கொளுங்கள்ளேன்!
ReplyDeleteதமிழ்மணம் .+1
நண்பர் ஸ்பை அவர்களுக்கு முகநூலில் எவனோ சொன்னான் என்பதற்காக ஏன் ? மனதை குழப்பிக் கொள்(ல்)கிறீர்கள் புனைப்பெயர் இஷ்டப்பட்டுதானே வைத்தீர்கள் பிறகு என்ன கஷ்டம் ? வலையில் தங்களை இன்னும் ஸ்கூல்பையனாகத்தானே உலா வருகிறீர்கள்
ReplyDeleteகார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
கார்த்திக் சரவணன்
எதற்க்கு இப்படி அழைக்கச்சொல்கிறீர்கள் இது என்ன நீதி மன்றமா ? விட்டுத்தள்ளுங்கள் ஸ்பை என்ற கார்த்திக் சரவணன் சாரி ஸ்கூல் பையன்.
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
I feel that your original identity of school paiyan should be maintained,come whatever it be!
ReplyDeleteVishwa
உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் அடுத்தவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்
ReplyDeleteஎன்னை பொறுத்தவரையில் புரொபைல் படத்தில் உங்கள் படத்தை போட்டு அந்த படத்தின் மேல் உங்கள் பெயரை பதிந்து கொண்டு அதனை உங்கள் புரொபைல் படமாக எல்லா இடத்திலும் பதியுங்கள் தளத்திலும் பேஸ்புக்கிலும் ஸ்கூல்பையன் என்ற பெய்ரையே பயன் படுத்துங்கள் அதன் பின் எல்லாம் சரியாகும்
இது எல்லாவற்றையும் விட மிக முக்கியம் நீங்கள் என்ன பதிவு பதிகிறீர்கள் என்ன கருத்தை ஆழமாக சொல்ல வருகிறீர்கள் என்பதுதான் அதில் கான்சன்ரேஷன் பண்ணினால் அதன் பின் எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை.
நான் வலைதளம் ஆரம்பித்து நடத்திய முதல் வருடம் பலரால் கேலி செய்யப்பட்டேன் அவர்கள் உண்மைகள் என்பதை எப்படி எல்லாம் கேலி செய்யலாம் என்னை எப்படி எல்லாம் காயப்படுத்தாலம் என்று எண்ணி குருப்பாக சேர்ந்து டீசிங்க் பண்ணினார்கள் சில பேர் இவன் என்னடா இப்படி தலைப்பு வைக்கிறான் இப்படி எல்லாம் வைக்காதே என்று சொன்னார்கள் அப்படி செய்தால் உன் தளத்திற்கு வர மாட்டோம் என்று சொன்னார்கள் அப்படி சொன்னவர்கள் இப்போதும் நமது மூத்த பதிவர்கள் என்று அழைக்கப்படும் பெரியவர்கள். ஆனால் நான் எதற்கும் செவி கொடுக்காமல் என் பாணியை கடைபிடித்து வருகிறேன் எனது தளம் இப்போது பலரால் கவனிக்கப்படுகிறது..
நீங்கள் பிரபலமாக ஆசையா அப்ப பேஸ்புக் பிரபலங்கள் செய்யும் வழிமுறைகளை கடைபிடியுங்கள் அதாவாது ஆங்கிலத்தில் படிக்கும் நாட்டி செக்ஸ் ஜோக்குகளை தமிழில் மொழி பெயர்த்து போடுங்கள் இடை இடையே அரசியல் கருத்துகளை பதியுங்கள் அடுத்தவன் சொன்ன கருத்துகளை உங்கள் கருத்துகளாக வெளியிடுங்கள் யூடியுப்பில் போய் சில விடியோ க்ளிப்பை எடுத்து பதியுங்கள் அவ்வளவுதான் நீங்கள் மிகப் பெரிய பிரபலம்தான் 5000 பத்தாயிரம் பலோவர்கள் இருப்பார்கள் அதனால் பலன் என்ன? உங்கள் நேரமும் டைமும் வேஸ்ட்டுதான்
நான் பேஸ்புக்கில் பார்த்த வரை சிவகாசி ராம் ,கஸாலி, சில நண்பர்கள் மற்றும் சில பத்திரிக்கை துறையை சார்ந்தவர்கள் மட்டும்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் மற்றவர்கள் எல்லாம் மேலே சொன்ன பிரபலம்தான் சார்
ஸ்கூல் பையன் உங்களுக்கு நல்ல வேலை இருக்கிறது நல்ல மனைவி மற்றும் 2 அழகான குழந்தைகள் மற்றும் பாலகணேஷ், சீனு, ஆவி போன்ற நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் இதைவிட வேற என்ன உங்களுக்கு வேண்டும் வேற எதற்காவது ஆசைப்பட்டு இதை எல்லாம் இழந்து விட வேண்டாம். நான் சொன்னதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeleteநண்பரே
ReplyDeleteதங்களின் வருத்தம் தேவையற்றது என்று நினைக்கின்றேன்
போற்றுவோர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே
என்று நம் பணியை செய்து கொண்டே செல்வோம்.
ஸ்கூல் பையன் என்றால், இப்பொழுது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்க வேண்டும்
என்பது அவசியமா என்ன?
நாம் அனைவருமே பள்ளிக்குச் சென்றவர்கள்தான்,
அதனால் நாம் அனைவருமே ஸ்கூல் பையன்தான்.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் உள்ள இளமை, எழுச்சி
மற்ற பெயர்களில் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது
மற்றவர்களுக்காக பெயரினை மாற்றும் முயற்சி, முடிவு என்பது
தேவையற்றது என்பதே என் கருத்து நண்பரே
தம 6
ReplyDeleteஉங்கள் முடிவு மீன்கடைக்காரரின் முடிவாக இருக்காது நிலையாக இருக்கட்டும்...
ReplyDeleteஎனக்கென்னவோ ஸ்பை ரொம்ப பிடித்திருகிறது...
ஸ்கூல் பையன் என்ற பெயர் நண்பர்கள் வட்டாரத்தில் நன்கு அறிமுகமாகியுள்ள நிலையில் நீங்கள் சற்று யோசிக்கலாம். தாங்கள் சொல்லும் காரணங்களை வைத்துப் பார்க்கும்போது புலவர் இராமாநுசம் ஐயா சொல்வது போன்று அடைப்புக்குள் தற்போதைய பெயரை ( பழகும் வரை ) போடுவது சரியாக இருக்கும். மற்றவர்களுக்காக முடிவெடுக்காக வேண்டாம். தாங்களே முடிவெடுங்கள்.
ReplyDeleteஸ்.பை. ஏனிந்த கவலை. உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அந்த பெயரிலேயே உங்கள் பதிவுகளை எழுதுங்கள்.....
ReplyDeleteசரி கேஎஸ்:)
ReplyDeleteத ம +1
karthik saravananum nalladhan irukku boss
ReplyDelete