கலர் பென்சில் - 03.03.2014
Monday, March 03, 2014
Posted by கார்த்திக் சரவணன்
பதிவர் சந்திப்பு
இந்த வருடம் தொடங்கியது முதலே பதிவர் சந்திப்பாகத்தான் கழிந்துகொண்டிருக்கிறது. ஜன.1 ஆம் தேதி எங்கள் ப்ளாக் கௌதமன் சார் சென்னையில் சந்திப்பதாக முகநூலில் அழைப்பு விடுக்க, நான், வாத்தியார் பால கணேஷ், கோவை ஆவி, சீனு, ரூபக் ராம் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அடுத்தடுத்து பதிவர்களின் புத்தக வெளியீடு, புத்தகத் திருவிழா என்று நேற்று பதிவர் சேட்டைக்காரன் அவர்களின் சென்னை விஜயம் வரை இந்த ஆண்டு பதிவர் சந்திப்பாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது.
பிரிந்தோம், சந்தித்தோம்
1997 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து முடித்ததும் அவரவர் தங்களது வழி நோக்கிச் சென்றுவிட யாரும் யாரிடமும் அதிக தொடர்பிலில்லை. இருந்தாலும் சென்னையிலேயே நிறைய பேர் இருப்பதால் சென்னை நண்பர்கள் மட்டும் எங்காவது சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எல்லாருக்கும் பொதுவான ஒரு இடமாக எங்கள் வீடே அமைய கடந்த ஞாயிறன்று வீட்டிலேயே சந்தித்தோம். நாள் முழுவதும் பழைய நினைவுகளுடன் குதூகலமாகச் சென்றது.
ஒரு சம்பவம்
கடந்த வாரத்தில் ஒரு நாள். இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். ஆதம்பாக்கம் பகுதியில் செல்லும்போது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பைக்கில் துரத்திக்கொண்டிருந்தான். காலை நேரம் என்பதாலும் குறுகிய சாலை என்பதாலும் வாகன நெரிசல் அதிகம் இருந்தது. அவன் முன்னே செல்வதும் அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்ல எத்தனிப்பதும் பின் டிராபிக்கால் சொல்ல முடியாமல் போவதுமாக இருந்தது. நானும் அவனை விடாமல் துரத்திக்கொண்டிருந்தேன். அவன் அந்தப் பெண்ணுடன் என்ன சொல்லப்போகிறான் என்று எனக்குப் புரிந்துவிட்டது. அந்தப்பெண் அணிந்திருந்த துப்பட்டா பின் சக்கரத்துக்கு அருகே பட்டும் படமாலும் உரசிக்கொண்டே வந்தது. ஒரு வழியாக நெருங்கி விஷயத்தை சொல்ல, அந்தப்பெண்ணும் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டார். அதற்குள் நான் அந்தப்பையனை நெருங்கி விட்டேன். அவனிடம் சொன்னேன், "தம்பி, சைடு ஸ்டாண்டை எடுத்து விடுப்பா".
பார்த்த திரைப்படம்
தெகிடி. அர்த்தம் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை. இணையத்தில் நண்பர்கள் நன்றாக இருப்பதாகச் சொல்ல, நேற்று மாலை ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி தியேட்டரில் பார்த்தேன். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். நாயகன் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியில் பணிபுரிகிறார். அவர் உளவு பார்க்கும் நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம் என்பதை வளவளக்காமல் பளிச்சென்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வருடத்தின் தவற விடக்கூடாத திரைப்படம்.
சுப முடிவு
"இப்படிக்கு இறந்து போனவன்" கதைக்கான முடிவு இப்படி இருக்கக்கூடாது என்று பலரும் பின்னூட்டத்தில் கூறியிருந்தார்கள். கதையின் நாயகன் வாழவேண்டியவன் என்றாலும் யதார்த்த வாழ்வில் நடக்கும் ஒரு விஷயத்தையே சொல்லியிருந்தேன். கதை சுபமாக முடிந்திருந்தால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும் என்றே எண்ணுகிறேன். இருந்தாலும் ஒரு நல்ல முடிவாக கடைசி பத்தியை மட்டும் கீழே தந்திருக்கிறேன். படியுங்கள்.
எனக்கே என்மீது கோபம் வந்தது. வண்டியை இன்னும் வேகமாகச் செலுத்தினேன். எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன் என்று தெரியவில்லை, அரை மணி நேரம் கடந்திருந்தது. எப்போதாவது கோபம் வரும் வேளையில் வண்டியை எடுத்துக்கொண்டு இப்படிச் செல்வது வழக்கம். மனம் லேசானது போலிருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். அங்கே வெளியே வாயெல்லாம் பல்லாக வெளியே நின்றுகொண்டிருந்தாள். "என்னம்மா?" என்றேன், "உன்னைப் பாக்க வந்திருக்காங்கடா" என்றாள். உள்ளே ஒரு தம்பதி. "நான், சுப்பிரமணியம். அடுத்த தெருவுல தான் குடியிருக்கேன். நீங்க பொண்ணு பாக்கப் போறதா கேள்விப்பட்டேன். அதான் நாங்களே தேடி வந்துட்டோம். ஒரு நல்ல நாளாப் பாத்து நீங்களே வந்து பொண்ணு கேளுங்க" என்றார். நான் கேள்விக்குறியோடு அவரையே பார்க்க, "பிரச்சனையில்லை, உங்களைப் பத்தி என் மகளுக்குத் தெரியும். தெரிஞ்சே தான் சம்மதிச்சா, உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
எனக்கு நம்பிக்கையில்லை. இவர்களும் ஆசை காட்டி மோசம் செய்தால் என்ன செய்வது? வாசலிலேயே நின்றுகொண்டு யோசிக்கலானேன். என்னை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது. "அக்கா இதைக் கொடுக்கச் சொன்னாங்க" என்று என் கையில் ஒரு காகிதத்தைத் திணித்துவிட்டு ஓடிவிட்டான். என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே திறந்தேன். "என் உயிரிலும் மேலான உங்களுக்கு" என்று தொடங்கியிருந்தது அந்தக்கடிதம்.
This entry was posted by school paiyan, and is filed under
கலர் பென்சில்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
வேறு வேறு பாதையில் பிரிந்து சென்று விட்ட ஆடுகள் (நண்பர்கள்) மீண்டும் ஒரு மந்தையில் (வீட்டில்) சந்தித்தது என்பது மிக இனிப்பான விஷயம். இது அடிக்கடி நிகழட்டும் என்று வாழ்த்துகிறேன். அந்த ‘ஒரு சம்பவம்’ அருமை. நிறையப் பசங்க இப்படித்தான் பொண்ணுங்களை வெறிக்கிற சுவாரஸ்யத்துல தங்களையே மறந்துடறாங்க. இந்த சுப முடிவு தர்றதால உன் கதையோட வீரியம் குறைஞ்சிடலைங்கறது என்னோட கருத்து ஸ்.பை.!
ReplyDeleteயதார்த்த வாழ்வில் நடக்கும் ஒரு விஷயத்தையே சொல்லியிருந்தேன்./// unmai tan sir. makkalukku kadhiyin mudivaiye erkka mudiyathavarkal eppadi oru matru thirnaliyai thannudiya thunaiyaka erparkal sir? vilippunarvu vara vendum. innum padam parrkala katayam parkalam solli iruppathala parkkuren.
ReplyDeleteநண்பர்கள் ஒன்று கூடுவது மனதிற்கு இன்பம் !
ReplyDeleteகதை முடிவு மனசுக்குள் ஜில்லுன்னு இருக்குய்யா !
இனிய சந்திப்பு - மகிழ்ச்சி...
ReplyDeleteசம்பவத்தில் இரு உதவிகள்... சுப முடிவுக்கும் பாராட்டுக்கள்...
"தம்பி, சைடு ஸ்டாண்டை எடுத்து விடுப்பா".//ஹா..ஹா..
ReplyDelete//தம்பி, சைடு ஸ்டாண்டை எடுத்து விடுப்பா// ஹா ஹா ஹா
ReplyDeleteஇந்த சுப முடிவு கூட நல்லா தான் இருக்கு
தம்பி ஸ்பை நீ ஹெல்மெட் மாட்டி இருந்தியா!?
ReplyDeleteசபாஷ் சரியான கேள்வி..!
Deleteஸ்பை - அந்த பையன் பொண்ணு சம்பவத்தை அழகான ஒரு சிறுகதையாவே கொடுத்திருக்கலாமே.. (சுபமான முடிவோட)
ReplyDelete//"என் உயிரிலும் மேலான உங்களுக்கு" என்று தொடங்கியிருந்தது அந்தக்கடிதம்.//
ReplyDeleteசெத்தாண்டா சேகரு! என்று ஒரு ஸ்மைலியோட கார்ட் போட்டால், தலைப்புக்கும் கதைக்கும் ஒரு கனெக்ஷன் கொடுத்த மாதிரி இருக்குமே!
கலர் கலரா பென்சில்!அந்தப் பையன்..... துப்பட்டா ............சைடு ஸ்ராண்டு.........ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteதம்பி சைடு ஸ்டாண்டை எடுத்து விடப்பா? எதிர்பாராத ட்விஸ்ட்! அருமையான பதிவு! நன்றி!
ReplyDeleteதம்பி சைடு ஸ்டாண்ட் எடுத்து விடுப்பா சூப்பர்!....
ReplyDeleteகதை முடிவு அதுவும் அந்த கடைசி வரி நச்!!! நெஞ்சில் சில் சில் சில்...சில்.....
அவங்கதான் சின்னஞ்சிறுசுங்க வண்டியில் வேகமாப் போவாங்க ,நீங்களும் அந்த வேகத்தில் போகலாமா ?
ReplyDeleteசிவாஜி படத்திலே செத்தாலே படம் ஓடாது ..அது மாதிரிதான் எதுவும் சுபமாய் முடிந்தால்தான் ஒரு நிம்மதி !
த ம 8
ஒரு பெண் திருமணம் செய்ய மறுத்ததற்கு யாராவது உயிர் விடுவார்களா? ஆனால் இந்தக் காலத்தில் இப்படித்தான் நடக்கிறது. வருத்தமான முடிவு.
ReplyDeleteபோன பதிவிற்கு போடவேண்டிய காமென்ட் இங்கு வந்துவிட்டது, மன்னிக்கவும். இந்த முடிவு..... என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ReplyDeleteபதிவர் சந்திப்பும், நீங்களும் உங்கள் பழைய நண்பர்களும் சந்தித்ததும் சுகமான நினைவுகள் தான்.
சைடு ஸ்டாண்ட் நல்ல திருப்பம்!
Nanbargal santhipu, Blog friends meet, oru sambavam ..Anaithum Arumai..... Maatriya Mudivu arumai.......
ReplyDeleteதம்பி ஸ்கூல் பையா பைக்கில் நிங்கள் துரத்தியது சரி ஆனால் அதற்காக என் பைக்கையா என்னிடம் சொல்லாமல் எடுத்து செல்வது??
ReplyDeleteபள்ளி,கல்லூரி நண்பர்களோடு சேர்ந்துக்கொண்டு மலரும் நினைவுகளை அசை போடுவதில் இருக்கும் சுகமே தனி தான்.
ReplyDeleteஸ்பை - அந்த சம்பவத்தின் கடைசியில் நீங்கள் சொன்னது தான் சரியான டிவிஸ்ட்.
பதிவர் சந்திப்பு, நண்பர்கள் சந்திப்பு, கதை முடிவு என எல்லாமே அருமை.
ReplyDeleteடிப்ளமோ 97ல் முடித்தீர்களா? நான் 2000...:) நான் இயந்திரவியல்... நீங்கள் எந்த துறையில்?
என்னுடைய முதல் வருகை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபகிர்வு மிகவும் பிடித்திருந்தது.
அடிக்கடி நேரம் கிடைக்கும்போது வருகிறேன்.
கலர் பென்சில் வண்ணமயமாக இருக்கிறது ஸ்.பை.
ReplyDeleteமாற்றித் தந்த முடிவும் நன்றாக இருக்கிறது.....
தம்பி ஸைட் ஸ்டாண்ட்... :))))
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஅடிக்கடி இப்படி பதிவர்கள் சந்தித்துக் கொள்வது மனதிற்கு ஒரு மகிழ்வையும் நெகிழ்வையும் தரும் என்று நம்புகிறேன். தொடருங்கள். படத்தோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர்..
அடுத்த பதிவைப் போடுங்க ஸ்பை!
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு
வலைச்சர தள இணைப்பு : வழிகாட்டிகள்
ஸைடு ஸ்டாண்ட் :)
ReplyDelete