வெரைட்டி - 09.02.2013
Saturday, February 09, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வெரைட்டி - 09.02.2013
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் திரு.தீபன் என்பவர் எனக்கு போன் செய்திருந்தார். ஆலப்புழை பற்றிய மேலதிக தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். ஆஹா நம்ம சைட்டை பார்த்துகூட மக்கள் போன் செய்கிறார்களே என்று மிகவும் மகிழ்ந்தேன்.
வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் ஸ்கூல் பையனின் வலைப்பூவுக்கு ஹிட்ஸ் கன்னா பின்னாவென்று எகிறி வருகிறது. வெறும் ஆறு பதிவுகளே எழுதியுள்ள நிலையில் தற்போதுவரை 1500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுகப் படுத்திய "திடங்கொண்டு போராடு" சீனுவுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி. துப்பாக்கி சினிமா விமர்சனம் அதிகம் பேரால் படிக்கப்பட்டிருந்தாலும் அனைவரின் பேவரிட் ஆலப்புழை பற்றிய கட்டுரைகளே என்பது பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது. கடல் படத்தில் ஆலப்புழை காட்சிகள் சில வருகின்றன என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். படம் பார்ப்பதற்கு இஷ்டமில்லையென்றாலும் நான் சென்று வந்த இடமென்பதால் பார்க்க ஆவலாக இருக்கிறது. கடுமையான வேலைப்பளு காரணமாக என்னால் அதிகம் எழுத முடியாவிட்டாலும் தினம் தினம் வரும் வலைப்பூ பார்வைகளும் பின்னூட்டங்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்துகின்றன.
நான் எழுதிய பின்னூட்டங்களைப் பார்த்து மின்னல் வரிகள் பாலகணேஷ் போன் செய்தார். கமெண்ட் வந்தால் போன் எப்படி சொல்கிறது என்று கேட்டார். அது ஒன்றுமில்லை, இன்டர்நெட் இணைப்புள்ள போன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். பிரபல பதிவரே என்னிடம் போனில் பேசியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
விஸ்வரூபம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக வெளியாகிவிட்டது. பார்த்தும் விட்டேன். படம் மொத்தத்தில் நன்றாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு சில சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் முதல் சண்டைக்காட்சி அதிரடியாக இருக்கிறது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணா சாலை பல நாட்களாக ஒருவழிப் பாதையாகவே உள்ளது. எல் ஐ சி செல்வதற்கு ஒரு விதத்தில் எளிதாக இருந்தாலும் அங்கிருந்து திரும்பி வரும்போது மிகவும் சிரமமாக உள்ளது. முக்கியமாக தி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் திக்குமுக்காட வைக்கிறது. விரைவாக மேம்பாலப் பணிகளை முடித்தால் நலம்.
முகநூலில் ரசித்த படம்
பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.. நன்றி...

This entry was posted by school paiyan, and is filed under
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
சந்தோசம்... தொடர்க கட்டுரைகளை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteli...li..liked...இல்லேன்னா அழுதுடுவான் போலிருக்கே...
முதல் பின்னூட்டமிட்ட பின்னூட்டப்புயலுக்கு நன்றி...
Deleteஎன்னாது.... நான் பிரபல பதிவரா? எப்பருந்து... சொல்லவே இல்லயேப்பா!
ReplyDeleteநிறைய ஹிட்ஸ் வந்திருக்கறது ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய வளர வாழ்த்துகள்! அதுசரி.... இந்த விஷயத்தை சொன்னா போறாதா? ஸ்கிரீன் ஷாட் எடுத்து வேற போடணுமா? ஸ்கூல்பையன்கறத இப்பிடியா நிரூபிக்கிறது? ஹி... ஹி...
விஸ்வரூபம் நான் இன்னும் பாக்கலைங்கறதால நீங்க எழுதினத மட்டும் ரசிச்சேன். ட்ராஃபிக் பிரச்னை... மவுண்ட்ரோட்ல ஆபீஸ் இருக்கறதால நான் அன்றாடம் அனுபவிச்சு, அவஸ்தைப்பட்டு வர்ற ஒருத்தன். உங்க கருத்தை கை தட்டி ஆமோதிக்கறேன்!
ஹும்.... ஒரு எடத்துலயாவது இந்த D.D.ய முந்திக்கிட்ட என்ட்ரி குடுத்துரலாம்ன நினைக்கிறேன். முடிய மாட்டங்குதே....!
ஹி ஹி... ஒரு ஆர்வக்கோளாறில ஸ்கிரீன்ஷாட் எடுத்திட்டேன்... பெரிசா எடுத்துக்காதீங்க...
Deleteபின்னூட்டப்புயல் என்றைக்குமே பின்னூட்டப்புயல் தான்... நன்றி...
Nice post.
ReplyDeleteநன்றி வானதி...
Deleteஎழுதியுள்ள நிலையில் தற்போதுவரை 1500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது
ReplyDelete>>
1,500 லிருந்து 15,00,000 ஆக மாற வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி அம்மா...
Delete
ReplyDeleteநீங்க பெரியஆள்தான்....!
ஹிட்ஸ் எல்லாம் வாங்குறீங்க....
தொடர்ந்து ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகிறேன்.
ஹிட்சோ ஹிடஸ் கிடைக்க வாழ்த்துகள் எங்களுக்கும் சொல்லித்தாங்களேன் கொஞ்சம்
ReplyDelete