பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2
Tuesday, December 25, 2012
Posted by கார்த்திக் சரவணன்
பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2
நண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது. இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள். படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.
பின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது. எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது. வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி. எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சாகமாக உணர்ந்தோம்.
மாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள். இஞ்சின் அணைக்கப்பட்டது. படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது. விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம். இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.
அழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள். அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை. நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம். அனைவரும் நடந்தே செல்கிறார்கள். மறு கரையில் ஒரு பெரிய சர்ச். மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது. நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...
அந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது. ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது. இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.
இரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது. ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம். (போட்டோ எடுக்கலையே!)
கொசுக்கடி அதிகம் இருந்தது. அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம். ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம். மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.
காலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள். அருமை. கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது. ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள். இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது. பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது. பின்னர் சூடான காபி. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது. காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.
நாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.
படகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.
கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள். என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.
நன்றி
ஸ்கூல் பையன்...

சர்ச்.. பின்னணியில் நிலா |
பாலத்திலிருந்து |
நெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை |
படகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா |
கொஞ்சம் இருட்டியதும் |
சந்திரன் |
அந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது. ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது. இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.
உள்ளூர் பஸ் ஸ்டாப் |
இரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது. ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம். (போட்டோ எடுக்கலையே!)
கொசுக்கடி அதிகம் இருந்தது. அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம். ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம். மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.
காலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள். அருமை. கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது. ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள். இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது. பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது. பின்னர் சூடான காபி. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது. காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.
நாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.
படகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.
கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள். என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.
நன்றி
ஸ்கூல் பையன்...
This entry was posted by school paiyan, and is filed under
ஆலப்புழை,
கேரளா,
படகுசவாரி,
பயணக்கட்டுரை
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தகவல்கள் ,நீகள் சொல்லுவதை படிக்கும்போதே ஆர்வம் அதிகமாகி நாமும் சென்றுவிட வேண்டுமென துடிக்கிறது ,இதை பதிவாக சொல்லாமல் நடந்ததை அப்படியே சொன்னது அருமை
ReplyDeleteநன்றி நண்பரே... அனைவரும் கண்டிப்பாக ஒருமுறை சென்று வர வேண்டிய இடம்...
Deleteஒரு நாள் முழுவதும் படகு சவாரி படிக்கும் பொழுதே செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது, சீக்கிரம் செல்ல வேண்டும் சார், படங்களுடன் உங்கள் எழுத்து அருமை, முதலில் இதி படித்ததால் தொடர்ச்சி புரியாமல் குழம்பி விட்டேன்.....
ReplyDeleteவிடிவி படத்தில் பார்த்தது போல் இருந்தது...
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் சில காட்சிகள் இந்தப் பகுதியில்தான் படமாக்கினார்கள் என்று அங்கேயும் சொன்னார்கள்... நன்றி நண்பா...
Deleteஅருமையான படகுப்ப்யணம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி சகோதரி...
ReplyDeleteகடவுளுக்குச் சொந்தமான நாடு அற்புதமாக இருந்தது. படங்கள் நன்று.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
Deleteஎன்ன ரம்யமான காட்சிகள்.அப்படியேபுகப்படக்கருவியால் அள்ளி வந்து விட்டீர்கள்.பகிர்வும் படங்களும் அருமை
ReplyDeleteவணக்கம் சகோதரி... மொத்தம் நானூற்றுச் சொச்சம் புகைப்படங்களும் 20 காணொளிகளும் எடுத்திருக்கிறேன்.. எல்லாவற்றையும் வெளியிடுவதென்றால் இன்னும் 10 பதிவுகள் போட வேண்டும்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....
Deleteபடங்களே கவிதையாக/
ReplyDeleteகேரளா செல்லவேண்டும் என்ற ஆவலை விதைத்து விட்டீர்கள் !படங்களை மத்தியமான அளவில் (large size) அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் .
ReplyDeleteஅடடா அழகான இயற்கை சூழலை ரம்மியமாக ரசித்துள்ளீர்கள். படங்களும் சொல்லிச்சென்ற விதமும் படிப்பவர்களுக்கு அந்த இடத்திற்கு செல்லும் ஆவலையே தூண்டும்.
ReplyDeletesupera erukku boss
ReplyDeleteellame arumaya eruku
ReplyDelete(h)
to see students talents visit
http://studentsdrawings.blogspot.in
புகைப்படங்களும், பயணக் கட்டுரையும் அருமை.. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது..
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
Deleteintersting
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
Deleteஇந்த இரண்டாம் பகுதியையும் ரசித்துப் படித்தபின் நாமும் ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. படங்களும் அருமை.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
Deleteஇரண்டாம் பகுதியும் அருமையாக இருந்தது. எங்களையும் செல்ல தூண்டி விட்டது.
ReplyDeletemikka nanry.
ReplyDeleteVetha.Elangathilakam.
பயணக் கட்டுரை இரண்டுமே அங்கே செல்லும் ஆர்வத்தைத் தூண்டியது நிஜம்...
ReplyDeleteSuperb ....just like real running commentary with photo clippings...
ReplyDeleteஉங்களுடனே சேர்ந்து வந்த அனுபவத்தைத் தந்தது உங்களின் கட்டுரை...
ReplyDelete